நுபுர் சர்மா விவகாரத்தில் ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான் அமைதி காப்பது ஏன்? - பிரபல நடிகர் பகீர் பேட்டி


நுபுர் சர்மா விவகாரத்தில் ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான் அமைதி காப்பது ஏன்? - பிரபல நடிகர் பகீர் பேட்டி
x

பாலிவுட்டின் ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் அமீர் கான் ஆகியோர் சர்ச்சைக்குரிய அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை என நடிகர் நசீருதீன் ஷா கூறியுள்ளார்.

மும்பை,

சமீபத்தில் பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா நபிகள் நாயகம் குறித்து பேசிய சம்பவம் பெரும் சர்ச்சையானது. உலகளவில் இஸ்லாமிய நாடுகள் பலவும் இதுகுறித்து இந்தியாவிற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், இந்தியாவும் பதில் விளக்கம் அளித்தது.

இந்த நிலையில், முகமது நபி பற்றி நுபுர் ஷர்மா சமீபத்தில் தெரிவித்த கருத்துகளால் சர்வதேச அளவில் நடந்த சம்பவம் குறித்து திரையுலகம் மவுனம் சாதிப்பது ஏன் என்பது குறித்து பாலிவுட் மூத்த நடிகர் நசீருதீன் ஷா கருத்து கூறியுள்ளார்.

பாலிவுட்டின் மூன்று கான்களான ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் அமீர் கான் ஆகியோர் உட்பட பலரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை என நடிகர் நசீருதீன் ஷா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

நடிகர் நசீருதீன் ஷா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது;-

பாலிவுட்டின் மூன்று கான்களான ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் அமீர் கான் ஆகியோர் உட்பட பலரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை. ஒருவேளை அப்படி ஏதேனும் பேசினால் அவர்கள் இழக்க வேண்டியது நிறைய இருப்பதால், சர்ச்சைக்குரிய அரசியல் பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை.

தி காஷ்மீர் பைல்ஸ் போன்ற 'போலி-தேசபக்தி' சினிமா படங்கள் வெளியாகி வெற்றிபெற்றுள்ள. காஷ்மீரிய இந்துக்கள் அனுபவித்த துன்பங்கள் பற்றிய கிட்டத்தட்ட ஒரு கற்பனையான பதிப்பு தான் இப்படம். ஆனால், அரசாங்கம் அதை ஊக்குவிக்கிறது.

ஷாருக்கானுக்கும் அவருடைய மகனுக்கும் என்ன நடந்தது என்பதும் அதை அவர் எதிர்கொண்ட கண்ணியமும் பாராட்டத்தக்கது. அவருக்கு நடந்தது ஒரு வேட்டையைத் தவிர வேறில்லை. அவர் இந்த விஷயத்தில் வாயை மூடிக்கொண்டு இருந்திருக்கிறார். அவர் செய்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான், திரிணாமுல் காங்கிரசுக்கு ஆதரவளித்து பேசியதும், மம்தா பானர்ஜியைப் பாராட்டியதும் தான்.

அதே போல, சோனு சூட் ரெய்டு செய்யப்படுகிறார். எந்தவொரு அறிக்கையையும் வெளியிடும் எவருக்கும் இதுபோன்ற பதில் கிடைக்கும். ஒருவேளை நான் கூட அடுத்த இலக்காக இருக்கலாம். எனக்கு தெரியாது. அப்படி என் மீது, ரெய்டு நடத்தினால் அவர்களுக்கு ஒன்றும் கிடைக்கப்போவதில்லை" என்று சிரித்தபடியே கூறினார்.


Next Story