'பதான்' வசூல் சாதனை... இத்தனை கோடியா ? வெளியான அறிவிப்பு


பதான் வசூல் சாதனை... இத்தனை கோடியா ?  வெளியான அறிவிப்பு
x

இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த 25-ஆம் தேதி இந்தியா முழுவதிலும் 8000 திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில், இப்படம் இந்தியாவில் ரூ. 367 கோடியும் வெளிநாடுகளில் ரூ. 224கோடியும் வசூலித்து மொத்தம் ரூ.591 கோடி வசூலை குவித்துள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


Related Tags :
Next Story