சைக்கோ-திரில்லர் படமாக, 'பட்டாம்பூச்சி'


சைக்கோ-திரில்லர் படமாக, பட்டாம்பூச்சி
x

பட்டாம்பூச்சி 1980களில் நடக்கும் சைக்கோ திரில்லர் கதை. திருமதி. குஷ்பூ சுந்தர் தயாரிக்க சுந்தர்சி கதாநாயகனாகவும், முதன்முறையாக ஜெய் வில்லனாகவும் நடித்துள்ள படம் இது.

இது குறித்து பட்டாம்பூச்சிப்படத்தின் டைரக்டர் பத்ரி கூறியதாவது -



சைக்கோ-திரில்லர் வகை படங்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. தமிழ் சினிமாவிலும் பல படங்கள் இந்த பாணியில் வந்திருந்தாலும், முற்றிலும் மாறுபட்ட தளத்தில் உருவாகியிருக்கும் படம் தான் பட்டாம்பூச்சி. படத்தின் பெயரில் உள்ள மென்மை, கதைவில் இருக்காது. பின்னர் ஏன் இந்த தலைப்பு என்ற கேள்விக்கு படத்திலேயே விடையை வைத்திருக்கிறோம்.படம் பார்க்கும்போது அது புரியும். இந்த படத்தின் கதை 1980 காலகட்டத்தில் நடக்கிறது.

எந்தவித தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாத அந்த காலத்தில் ஒரு குற்றவாளியை. அதுவும் ஒரு சைக்கோ கொலைகாரனை கண்டறிவது சாதாரண விஷயமும் கிடையாது. எனவே முழுக்க முழுக்க மனிதமூளை அனுமானிக்கும் உதவியால் அந்த கொலைகாரனை நெருங்குவதே படத்தின் கரு. எப்போதும் சைக்கோ கொலைகாரனுக்கு ஏன் கொலை செய்கிறோம்? என்ற காரணம், மிகவும் சாதாரணமாக இருக்கும். ஆனால் இந்த படத்தில் சைக்கோ கொலைகாரன், ஒரு வினோத நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட நபர். அந்த கொலைகாரனின் மயிர்கூச்செரிய செய்யும் நடவடிக்கை பார்வையாளர்களுக்கு கிலியை ஏற்படுத்தும்.

ஒரு வினோத பாதிப்பில் சிக்கிய நோயாளி மற்றும் கொடூர கொலைகாரனாக ஜெய்யும், அவரை பிடிக்க படாதபாடு படும் போலீஸ் அதிகாரியாக சுந்தர் சியும் மல்லுக்கட்டி இருக்கிறார்கள். இந்த ஆடு புலி ஆட்டத்தின் முடிவு எதிர்பாராதது. தமிழ்சினிமாவில் ஜெய் முதன் முறையாக ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தி ருக்கிறார். இதற்காக அவர் மேற்கொண்ட பயிற்சிகள் மிகவும் கடினமாளவை. பாதிக்கப்பட்ட நபர்களை பார்த்து, பேசி, பழகி அதன்பிறகே அந்த கதாபாத்திரத்தில் நடித்தார். அவரது நடிப்பின் உழைப்பு படம் பார்க்கும்போது புரியும். இந்த படம் அவரது சினிமா பயணத்தில் மைல்கள் என்றே சொல்லலாம். சுந்தர் சி.யும் தனக்கே உரிய மிடுக்கான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படம் நிச்சயம் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படமாக இருக்கும். சைக்கோ திரில்லர் ரக பட ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்கும் இந்த படம் மாறுபட்ட ஒரு அனுபவத்தை தரும் என டைரக்டர் பத்ரி கூறினார்.


Next Story