தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு: தேர்தல் ஆணையத்திற்கு தடை கோரிய பொதுநல மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி


தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு:  தேர்தல் ஆணையத்திற்கு தடை கோரிய பொதுநல மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
x

தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் சின்னங்களை ஒதுக்கீடு செய்வதற்கு தடை கோரிய பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டு இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.



புதுடெல்லி,


சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு ஒன்று விசாரணைக்கு இன்று எடுத்து கொள்ளப்பட்டது. இந்த மனுவில், தேர்தலின்போது அரசியல் கட்சிகள் சின்னங்களை தவறாக பயன்படுத்துகின்றன என கூறப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து, தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் சின்னங்களை ஒதுக்கீடு செய்வதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதற்கு பதிலாக தேர்தலை நடத்தும் தேர்தல் அதிகாரியே போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் சின்னங்களை ஒதுக்கீடு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கோர்ட்டின் நேரம் வீணடிக்கப்பட்டு உள்ளது என கூறி, அந்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்ததுடன், தவறாக வழிநடத்தும் நோக்குடன் மனுவை தாக்கல் செய்துள்ளார் என கூறி அந்த நபருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டு உள்ளது.


Next Story