"காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி" - துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்


காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி - துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்
x
தினத்தந்தி 31 May 2023 3:21 AM GMT (Updated: 31 May 2023 4:17 AM GMT)

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்று கர்நாடக துணை முதல்-மந்திரி டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தின் துணை முதல்-மந்திரியாக பொறுப்பேற்று இருக்கும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் நீர்வளத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்று உள்ளார். அதன்படி பெங்களூருவில் முதல் முறையாக நீர்வளத்துறை அதிகாரிகளுடன் டிகே சிவக்குமார் ஆலோசனை நடத்தினார். அதில் துறைரீதியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஆலோசனை கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் டிகே சிவக்குமார் கூறியதாவது:-

"காங்கிரஸ் கட்சி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும். கர்நாடக மாநிலத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள முக்கிய திட்டம், மேகதாது அணை மற்றும் மகதாயி அணை திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக விரைவில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திப்பேன். விரைவில் அனுமதி பெறுவதற்கான பணிகளை மேற்கொள்வேன். மேகதாது அணை கட்டுவது எங்கள் உரிமை. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி. வேறு மாநிலங்களுக்கு துரோகம் செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை, " என்று தெரிவித்தார்.


Next Story