மத்திய பிரதேசம்: பெட்ரோல் நிலையத்தில் பைக்கில் சிறுமியை கடத்திய மர்ம நபர்கள்


மத்திய பிரதேசம்:  பெட்ரோல் நிலையத்தில் பைக்கில் சிறுமியை கடத்திய மர்ம நபர்கள்
x

பெட்ரோல் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப வந்தவர்கள் சிலர் இதனை பார்த்து, அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.

போபால்,

மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரில் நகா சந்திரவதனி அருகே உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் வழக்கம்போல், பலர் பெட்ரோல் போட்டபடி இருந்தனர்.

இந்நிலையில், பைக்கில் வந்த இரண்டு பேர் திடீரென சிறுமி ஒருவரை கடத்தி சென்றனர். அவர்களில் ஒருவர் ஹெல்மெட் அணிந்தும் மற்றொருவர் முகம் தெரியாத வகையில் துணியால் மறைத்தும் வந்திருந்தனர். அந்த சிறுமி அலறியபோதும், அருகே இருந்தவர்கள் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை.

சிறுமியை கட்டாயப்படுத்தி, இழுத்து சென்ற நபரொருவர் பின்னர் சிறுமியை தூக்கி, பைக்கில் அமர வைக்கிறார். அதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவிக்கிறார். அதன்பின் அந்த நபர், பைக்கில் அமர்வதற்குள் பைக் முன்னே செல்கிறது.

இதனால், சிறுமியை பிடித்தபடி பின்னாலேயே ஓடுகிறார். பெட்ரோல் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப வந்தவர்கள் சிலர் இதனை பார்த்து, அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.

இதுபற்றி ஏ.எஸ்.பி. ரிஷிகேஷ் மீனா கூறும்போது, சிறுமிக்கு வயது 19 இருக்கும் என அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர். 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுமியின் இருப்பிடம் பற்றி கண்டறியும் முயற்சியும் நடந்து வருகிறது என கூறியுள்ளார்.


Next Story