16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்


16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்
x

சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் சிறுவன் உள்பட குற்றவாளிகள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் தீட்வானா மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த நபர் சிறுமியை வீட்டிற்கு வெளியே வரும்படி செல்போனில் கூறியுள்ளார். இதையடுத்து, அந்த சிறுமி தனது வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார்.

அப்போது, சிறுமியை அந்த நபர் காரில் ஆள்நடமாட்டமற்ற பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுவன் உள்பட மேலும் 2 பேருடன் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், சிறுமியை வீட்டின் அருகே இறக்கி விட்டு சென்றனர்.

தனக்கு நடந்த கொடூரம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story