கர்நாடகத்தில் புதிதாக கொரோனா பலி இல்லை


கர்நாடகத்தில் புதிதாக   கொரோனா பலி இல்லை
x

கர்நாடகத்தில் புதிதாக கொரோனா பலி இல்லை.

பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 21 ஆயிரத்து 917 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பெங்களூரு நகரில் 218 பேர், ராமநகரில் 33 பேர், குடகில் 32 பேர், மைசூருவில் 18 பேர், பெலகாவியில் 11 பேர், தட்சிண கன்னடாவில் 10 பேர் உள்பட புதிதாக 359 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இதுவரை 40 லட்சத்து 62 ஆயிரத்து 833 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று புதிதாக கொரோனாவுக்கு பலி இல்லை. இதுவரை 40 ஆயிரத்து 236 பேர் இறந்து உள்ளனர். 3 ஆயிரத்து 194 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். நேற்று 499 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 40 லட்சத்து 19 ஆயிரத்து 361 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். பாதிப்பு 1.63 சதவீதமாக உள்ளது.Related Tags :
Next Story