திடீர் பள்ளம் ஏற்பட்டதால் சுமனஹள்ளி மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் விரைவில் முடிக்கப்படும்-மாநகராட்சி அதிகாரி தகவல்


திடீர் பள்ளம் ஏற்பட்டதால் சுமனஹள்ளி மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் விரைவில் முடிக்கப்படும்-மாநகராட்சி அதிகாரி தகவல்
x

திடீர் பள்ளம் ஏற்பட்டதால் சுமனஹள்ளி மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: பெங்களூரு கோரகுண்டே பாளையா-நாயண்டஹள்ளி இடையே வெளிவட்ட சாலையில் சுமனஹள்ளி மேம்பாலம் உள்ளது. இந்த பாலம் பெங்களூரு வளர்ச்சி ஆணையம் சார்பில் கடந்த 2010-ம் ஆண்டில் கட்டப்பட்டது. பின்னர், 2016-ம் ஆண்டில் பெங்களூரு மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த பாலத்தின் சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீர் பள்ளம் விழுந்தது. அப்போது கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் வண்ணம் இருந்தன. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று பள்ளத்தை பார்வையிட்டனர். தற்போது அந்த பள்ளம் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரி கவுடா என்பவர் கூறியதாவது:-

சுமனஹள்ளி மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளம் சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. தரமான முறையில் இந்த பள்ளம் சரிசெய்யப்படும். பின்னர் ஆய்வு நடத்தப்பட்டு மேம்பாலம் விரைவில் மீண்டும் பயன்பாட்டிற்கு வரும். இந்த பாலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு இதபோல் திடீர் பள்ளம் ஏற்பட்டு சரிசெய்யப்பட்டது. பாலத்தின் ஸ்திரத்தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்பிப்பார்கள். மாநகராட்சி கமிஷனர் கூறியதுபோல் பெங்களூருவில் உள்ள 47 மேம்பாலங்களிலும் ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை தயாரிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story