ஏ.டி.எம். எந்திரத்தில் பணத்தை அபேஸ் செய்து வந்த 2 பேர் கைது


ஏ.டி.எம். எந்திரத்தில் பணத்தை அபேஸ் செய்து வந்த 2 பேர் கைது
x

போலி கார்டுகள் மூலமாக ஏ.டி.எம். எந்திரத்தில் பணத்தை அபேஸ் செய்து வந்த அரியானாவை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

போலி கார்டுகள் மூலமாக ஏ.டி.எம். எந்திரத்தில் பணத்தை அபேஸ் செய்து வந்த அரியானாவை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரூ.2.58 லட்சம் பணம் அபேஸ்

மும்பை பாண்டுப் பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் இருந்து வாடிக்கையாளர்களின் பணம் அபேஸ் செய்யப்படுவதாக போலீசில் புகார் வந்தது. இந்த புகாரின் படி போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரித்தனர்.

இதில், ஒருவர் ஏ.டி.எம். நுழைவு வாயிலில் நின்றபடியும் மற்றொருவர் உள்ளே நுழைந்து கையில் மடிக்கணினி உதவியுடன் ஏ.டி.எம். எந்திரத்தை ஹேக் செய்கிறார். பின்னர் நபர் வைத்திருந்த போலி கார்டுகள் மூலமாக ரூ.2 லட்சத்து 58 ஆயிரம் வரையில் பணத்தை அபேஸ் செய்து சென்றது கண்காணிப்பு கேமரா காட்சியில் பதிவாகி இருந்ததை போலீசார் கண்டனர்.

2 பேர் கைது

இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்களை வலைவீசி தேடிவந்தனர். கடந்த 22-ந்தேதி இரவு ஏ.டி.எம் மையத்திற்கு வந்த 2 பேரில் ஒருவர் உள்ளே சென்றார்.

இதனை கவனித்த வங்கி ஊழியர் ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் போலீசார் அங்கு வந்த போது வெளியே காவலுக்கு நின்ற நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உள்ளே இருந்த நபர் போலீசாரிடம் பிடிபட்டார். இவர் அரியானா மாநிலத்தை சேர்ந்த அரிப் கான் எனவும், தப்பி சென்றவர் தாரிப்கான் என தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் தப்பி சென்ற தாரிப்கானையும் பிடித்து கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 16 போலி ஏ.டி.எம். கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story