பாந்திரா மைதானத்தில் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்த வாலிபர்


பாந்திரா மைதானத்தில்  கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்த வாலிபர்
x
தினத்தந்தி 31 May 2023 6:45 PM GMT (Updated: 31 May 2023 6:46 PM GMT)

மும்பை,

மும்பை பாந்திரா மேற்கு பட்டேல் நகரி பகுதியை சேர்ந்தவர் இப்ராகிம் சேக் (வயது20). இவர் நேற்று முன்தினம் முதல் காணாமல் போய் விட்டார். இந்த நிலையில் நேற்று அங்குள்ள மைதானத்தில் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் இரு கும்பல்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. கடந்த 3 வாரத்துக்கு முன்பு முன்விரோதம் காரணமாக 23 வயது வாலிபர் அப்பகுதியில் கொலை செய்யப்பட்டார். அதே கும்பல் தான் இந்த கொலையிலும் ஈடுபட்டனரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story