மும்பை, புனே பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தரை தேர்வு செய்ய குழுக்கள் அமைப்பு


மும்பை, புனே பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தரை தேர்வு செய்ய குழுக்கள் அமைப்பு
x
தினத்தந்தி 31 Jan 2023 6:45 PM GMT (Updated: 31 Jan 2023 6:47 PM GMT)

மும்பை, புனே பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தரை தேர்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மும்பை,

மும்பை பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்த சுகாஸ் பெட்னேகரின் பதவி காலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிந்தது. மும்பை பல்கலைக்கழக பொறுப்பு துணை வேந்தராக சிவாஜி பல்கலைக்கழக துணை வேந்தர் திகாம்பர் ஷிர்கே உள்ளார். சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி காலமும் கடந்த மே மாதத்துடன் முடிந்துவிட்டது.

நீண்ட காலமாக பொறுப்பு துணை வேந்தர்களால் நடத்தப்பட்டு வரும் மும்பை, புனே பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணை வேந்தரை தேர்வு செய்ய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி குழு அமைத்து உள்ளார். மும்பை பல்கலைக்கழக துணை வேந்தரை தேர்வு செய்ய பல்கலைக்கழக மானியக்குழு முன்னாள் தலைவர் டாக்டர் பி.பி. சிங் தலைமையிலும், புனே துணை வேந்தரை தேர்வு செய்ய அனைத்து இந்திய தொழில்நுட்ப கல்வி குழு முன்னாள் தலைவர் டாக்டர் அனில் சகஸ்ரபுத்தே தலைமையிலும் குழுவை கவர்னர் அமைத்து உள்ளார்.



Next Story