பொதுமக்கள் புகார் அளிக்க பிரத்யேக எண்- மாநகராட்சி அறிவிப்பு


பொதுமக்கள் புகார் அளிக்க பிரத்யேக எண்- மாநகராட்சி அறிவிப்பு
x
தினத்தந்தி 31 May 2023 6:45 PM GMT (Updated: 31 May 2023 6:46 PM GMT)

மும்பை,

மராட்டியத்தில் தென்மேற்கு பருவமழை நடப்பு மாதத்தில் தொடங்க உள்ளது. இதன் காரணமாக மும்பையில் வெள்ளநீர் தேங்காமல் இருக்க கழிமுக கால்வாய்களில் தூர்வாரும் பணி, மின்இணைப்பு, வடிகால் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. தூர்வாரும் பணிகள் நிறைவு அடைந்த நிலையில் வாட்ஸ்அப் மூலம் புகார் அளிக்க வசதியாக மும்பை மக்களுக்கு பிரத்யேக நம்பர் ஒன்றை மாநகராட்சி அறிமுகப்படுத்தி உள்ளது. மாநகராட்சி அறிவித்து உள்ள 9324500600 என்ற எண் இன்று (வியாழக்கிழமை) முதல் செயல்படும். இந்த நம்பரில் தொடர்பு கொண்டு புகாரை பதிவு செய்து இடம், புகைப்படத்தை பதிவேற்றம் செய்யலாம். புகார் எண்ணை பெற்ற பின்னர் அங்கு சரி செய்யப்பட்டு புகைப்படத்தை அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த எண்ணில் எந்தவிதமான உரையாடல் வசதி இருக்காது என மாநகராட்சி தெரிவித்து உள்ளது.


Next Story