கட்டிடத்தின் முதல் மாடியில் திடீர் தீ- 2 பெண்கள் காயம்


கட்டிடத்தின் முதல் மாடியில் திடீர் தீ- 2 பெண்கள் காயம்
x
தினத்தந்தி 30 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-12-01T00:16:59+05:30)

தானே,

தானே மாவட்டம் கல்யாணில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியில் உள்ள ஒரு வீட்டில் நேற்றுமுன்தினம் இரவு எரிவாயு கசிவு ஏற்பட்டது. இதனால் சமையல் அறையில் திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. முதல் அறையில் இருந்த 2 பெண்கள் மற்றும் 6 மாத குழந்தை உள்பட 6 பேர் சிக்கி கொண்டனர். அப்போது தீ விபத்தினை நேரில் கண்ட மும்பை போலீஸ் துறையை சேர்ந்த வீரர் ஒருவர் பக்கத்து கட்டிட வேலைக்காக கட்டப்பட்டு இருந்த சாரம் வழியாக ஏறினார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜன்னல் வழியாக குழந்தை உள்பட 6 பேரை காப்பாற்றினார்.

இருப்பினும் இந்த தீ விபத்தில் 2 பெண்கள் தீக்காயமடைந்தனர். அவர்களை மீட்டு ஐரோலியில் உள்ள தீக்காய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு சென்று வீட்டில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சில மணி நேரம் போராடி அங்கு பற்றிய தீயை அணைத்தனர். தீ விபத்தினால் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story