திடீர் சூறாவளி காற்று; 589 வீடுகள் சேதம்


திடீர் சூறாவளி காற்று; 589 வீடுகள் சேதம்
x
தினத்தந்தி 31 May 2023 7:00 PM GMT (Updated: 31 May 2023 7:00 PM GMT)

பிவண்டியில் வீசிய திடீர் சூறாவளி காற்றினால் 589 வீடுகள் சேதமடைந்தன.

தானே,

பிவண்டியில் வீசிய திடீர் சூறாவளி காற்றினால் 589 வீடுகள் சேதமடைந்தன.

திடீர் சூறாவளி

தானே மாவட்டம் பிவண்டி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் திடீரென சூறாவளி காற்று வீசியது. அப்போது மழையும் பெய்ததால் மரங்கள் வேறொரு சாய்ந்தன. மேலும் குடிசை வீடுகளின் கூரைகள் சேதமடைந்தன. எதிர்பாராதவிதமாக வீசிய புயல் காற்றினால் பட்கா, போரிவிலி பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் திருமண மண்டபம் ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் அங்கு நடந்த திருமண நிகழ்ச்சி ரத்தானது. இந்த சம்பவத்தில் சிலர் காயமடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

10 பேர் காயம்

நிலவரம் மோசம் அடைந்ததை அடுத்து பிவண்டி மாநகராட்சியினர் அப்பகுதிக்கு ஆம்புலன்சு மற்றும் மீட்பு படையினரை அனுப்பி வைத்தனர்.

இது பற்றி தாசில்தார் ஆதிக் பாட்டீல் கூறுகையில், "சூறாவளிக்கு பட்கா, போரிவிலி, ராஹீர், வபேல், தலேபாடா, அங்கான் போன்ற கிராமங்களில் 589 வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன. மேலும் 10 பேர் லேசான காயமடைந்தனர். சேதமடைந்த வீடுகளில் தங்கி இருந்தவர்கள் அருகே உள்ள பள்ளியில் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்" என்றார்.


Next Story