எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பங்கேற்கிறார்


எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பங்கேற்கிறார்
x
தினத்தந்தி 31 May 2023 6:45 PM GMT (Updated: 31 May 2023 6:46 PM GMT)

மும்பை,

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஐக்கிய ஜனதாதளம் தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்தார். இதில் சமீபத்தில் மும்பை வந்து உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசினார்.

இந்தநிலையில் பீகார் தலைநகர் பாட்னாவில் வருகிற 12-ந்தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு நிதிஷ் குமார் ஏற்பாடு செய்துள்ளார். இந்த கூட்டத்தில் உத்தவ் தாக்கரே கலந்து கொள்ள இருப்பதாக அவரது கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவத் எம்.பி. நேற்று தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "ஒருமித்த கருத்துடைய கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிக்கு பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமை தாங்குகிறார். அவர் கூட்டி உள்ள கூட்டத்தில் எங்களது கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கலந்து கொள்ள இருக்கிறார்" என்றார்.


Next Story