63 நாயன்மார்கள் வருசாபிஷேக விழா


63 நாயன்மார்கள் வருசாபிஷேக விழா
x
தினத்தந்தி 31 Jan 2023 6:45 PM GMT (Updated: 31 Jan 2023 6:46 PM GMT)

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் 63 நாயன்மார்கள் வருசாபிஷேக விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலில் 63 நாயன்மார்கள், 9 தொகையடியார்கள் மற்றும் மாணிக்கவாசக சுவாமிகளின் உற்சவ மூர்த்திகளுக்கு 9-ம் ஆண்டு வருசாபிஷேக விழா நேற்று நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு, காலை 8.30 மணி முதல் 10 மணி வரை சங்கல்பம், கும்ப ஸ்தாபன பூஜைகளும், 10 மணி முதல் 12 மணி வரை 63 நாயன்மார்கள், 9 தொகையடியார்கள், மாணிக்கவாசக சுவாமி மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அலங்கார தீபாரதனையும் நடந்தது. மதியம் 1 மணிக்கு மேல் மகேஸ்வர பூஜையும் நடந்தது. மாலை 5 மணிக்கு பன்னிரு திருமுறை பாராயணம், இரவு 7 மணிக்கு ஸ்ரீ அப்பர் அடிகள் உழவாரப்பணி திருக்கூட்டத்தின் கைலாய வாத்தியம் மற்றும் நாதஸ்வர இன்னிசையுடன் 63 நாயன்மார்களின் திருவீதி உலா நடைபெற்றது.

விழாவில், கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, திருமுறை மன்ற தலைவர் கூடலிங்கம் ஆறுமுகச்சாமி, செயலாளர் நெல்லையப்பன், பொருளாளர் சிவானந்தம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story