ராட்சத குழாய் உடைந்து சாலையில் ஆறாக ஓடிய குடிநீர்


ராட்சத குழாய் உடைந்து சாலையில் ஆறாக ஓடிய குடிநீர்
x

ராட்சத குழாய் உடைந்து சாலையில் ஆறாக ஓடிய குடிநீர்

கன்னியாகுமரி

கருங்கல்:

குமரி மாவட்டத்தில் கடலோர கிராமங்களுக்கு குடிநீர் வழங்க சுனாமி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக ஐரேனிபுரம், சடையன்குழி, கிள்ளியூர், பாலூர், கருங்கல், மத்திகோடு, திக்கணங்கோடு, திங்கள்சந்தை போன்ற பகுதிகளில் சாலையின் நடுவே ராட்சத சிமெண்டு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாய்கள் நீரின் அழுத்தம் தாங்காமல் உடையும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இந்தநிலையில், நேற்று மாலையில் கருங்கல் அருகே மாத்திரவிளை பகுதியில் சாலையில் பதிக்கப்பட்டிருந்த ராட்சத குடிநீர் குழாய் திடீரென உடைந்தது. இதனால் குடிநீர் சாலையில் ஆறாக ஓடியது. இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதால் குழாய்கள் உடைவதை தடுக்க நிரந்த தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story