விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி


விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி
x
திருப்பூர்

விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி

உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் திட்டத்தின் கீழ் பயிர் சாகுபடி சார்ந்த விவசாயிகளுக்கான கார் பருவத்திற்கான முதல்கட்ட தொழில்நுட்ப பயிற்சி தாராபுரம் அடுத்த வீராச்சிமங்கலம் கிராமத்தில் நடைபெற்றது. தாராபுரம் உதவி வேளாண்மை இயக்குநர் லீலாவதி தாராபுரம் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் வேளாண்மை திட்டங்கள் மற்றும் மானிய விபரங்கள் பற்றி விரிவாக விளக்கினார். திருப்பூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் சுருளியப்பன் ஊட்டச்சத்துமிக்க தானியங்களின் முக்கியத்துவம், தானியங்களின் சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு குறைந்த நீர் தேவை உள்ள ஊட்டச்சத்து மிக்க தானியங்களான சோளம், கம்பு, ராகி சாகுபடியினை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.பயிற்சிக்கான ஏற்பாடுகளை தாராபுரம் வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்கள் செய்திருந்தனர். இப்பயிற்சி முகாமில் துணை வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story