உதவி உபகரணங்கள் பெற விண்ணப்பிக்கலாம்


உதவி உபகரணங்கள் பெற விண்ணப்பிக்கலாம்
x

உதவி உபகரணங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. உதவி உபகரணங்களுக்கு பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்படுகிறது. முதுகு தண்டுவடம் மற்றும் தசை சிதைவு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள், மூளை முடக்கு வாத நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு சக்கர நாற்காலிகள், மூன்று சக்கர சைக்கிள்கள் பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய செயலிகளுடன் கூடிய செல்போன்கள் வழங்கப்படுகிறது. கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை மற்றும் நவீன செயற்கை கால்கள், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மடக்கு ஊன்று கோல்கள், கைகடிகாரங்கள் மற்றும் நவீன மடக்கு ஊன்று கோல்கள், செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டு கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பெற்றோர்களுக்கான தையல் எந்திரங்கள் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் பெறாத மாற்றுத்திறனாளிகள் இது போன்ற உதவி உபகரணங்கள் பெற விண்ணப்பிக்கலாம். எனவே, தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கல்வி மாற்று சான்றிதழ், ஆதார் அட்டை நகல், மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-1 ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், பெரம்பலூர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வருகிற 10-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை 04328-225474 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.


Next Story