மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்


மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்
x

மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை

கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் வட்டார அளவிலான கூட்டமைப்புகள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், கிராமபுற மகளிர் சுய உதவிகுழுக்கள், நகர அளவிலான கூட்டமைப்புகள், பகுதி அளவிலான குழு கூட்டமைப்புகள் மற்றும் நகர்புற மகளிர் சுய உதவி குழுக்கள் ஆகியவற்றுக்கு 2022-23-ம் ஆண்டில் மாநில மற்றும் மாவட்ட அளவில் மணிமேகலை விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதற்கான படிவங்கள் அந்தந்த வட்டார இயக்க மேலாளர் அலுவலகத்தில் பெற்றுகொள்ளலாம். விருதுகள் உரிய தகுதிகள் அடிப்படையில் வழங்கப்படும்.

சிறந்த கூட்டமைப்பு தேர்விற்கான தகுதிகளாக அனைத்து மகளிர் திட்ட சுய உதவி குழுக்களும் ஊராட்சி அளவிலான, கூட்டமைப்பில் உறுப்பினராக இணைந்திருத்தல் வேண்டும். ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் குறைந்தபட்சம் 20 கூட்டங்கள் நடத்தப்பட்டிருத்தல் வேண்டும். இதேபோன்று சிறந்த சுய உதவி குழு தேர்விற்கான தகுதிகளும் வரையறை செய்யப்பட்டுள்ளது. வருகிற 25-ந் தேதிக்குள் முன்மொழிவுகள் பெற்று மகளிர் திட்டம் அலுவலகத்திற்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு மகளிர் திட்ட இயக்குனரை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.


Next Story