வத்தலக்குண்டு அருகே மலைக்கோவிலில் செங்குத்தான சாலையால் திணறும் பக்தர்கள்


வத்தலக்குண்டு அருகே மலைக்கோவிலில்  செங்குத்தான சாலையால் திணறும் பக்தர்கள்
x

வத்தலக்குண்டு அருகே மலைக்கோவிலில் செங்குத்தான சாலையால் மலைக்கோவிலுக்கு வாகனங்களில் வரும் பக்தர்கள் திணறுகின்றன.

திண்டுக்கல்

வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டுவில் கோட்டைப்பட்டி சென்றாயபெருமாள் மலைக்கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்தநிலையில் தற்போது புரட்டாசி மாதம் என்பதால் மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிலும் சனிக்கிழமை அன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இதற்கிடையே மலைக்கோவிலுக்கு செல்ல படிப்பாதையும், சாலையுடன் மலைப்பாதையும் என 2 வழிகள் உள்ளன. இந்தநிலையில் மலைப்பாதையில் ஒரு இடத்தில் செங்குத்தாக சாலை உள்ளது. இதனால் மலைக்கோவிலுக்கு வாகனங்களில் வரும் பக்தர்கள் திணறுகின்றன. செங்குத்தான சாலையில் வாகனங்கள் வரும்போது சில நேரங்களில் தடுமாறுகின்றன. இதனால் ஒருவித அச்சத்துடனேயே பக்தர்கள் வாகனங்களில் மலைக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர். எனவே செங்குத்தாக உள்ள சாலையை, கிடைமட்டமாக அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story