திண்டுக்கல்லில் கேன்களில் பெட்ரோல் விற்க தடை


திண்டுக்கல்லில் கேன்களில் பெட்ரோல் விற்க தடை
x

திண்டுக்கல்லில் கேன்களில் பெட்ரோல் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்

தமிழகத்தில் கோவை, மதுரை, சேலம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பா.ஜனதா, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதில் தொடர்புடையவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடக்காமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கேன்களில் பெட்ரோல் விற்க போலீசார் தடை விதித்தனர்.

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கேன்களில் பெட்ரோல் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கேன்களில் பெட்ரோல் வாங்க வருபவர்கள் குறித்த விவரங்களை, போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் என்று பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து திண்டுக்கல்லில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நேற்று முதல் கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்யப்படவில்லை. மேலும் இதுதொடர்பாக அறிவிப்பு பலகையும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளது.



Next Story