கேன், பாட்டில்களில் பெட்ரோல் வழங்க தடை


கேன், பாட்டில்களில் பெட்ரோல் வழங்க தடை
x

வேலூர் மாவட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை தடுக்க கேன், பாட்டில்களில் பெட்ரோல் வழங்க போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை தடுக்க கேன், பாட்டில்களில் பெட்ரோல் வழங்க போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

பெட்ரோல் குண்டு வீச்சு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து அமைப்பினர் வீடு, வாகனங்கள் மற்றும் அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இதையொட்டி வேலூர் மாவட்டத்தில் உள்ள பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். இந்து அமைப்பினர் வீடு, அலுவலகங்கள் மற்றும் கோவில், மசூதி உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் வாகன தணிக்கை, ரோந்து, கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை தடுக்க மாவட்டம் முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் கேன், பாட்டில்களில் பெட்ரோல் வழங்க கூடாது என்று போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டார்.

பாட்டில்களில் வழங்க தடை

இதுதொடர்பான அறிவிப்பு வேலூர் அண்ணாசாலையில் உள்ள பெட்ரோல் பங்குகளில் ஒட்டப்பட்டுள்ளன. அதில், காவல்துறையின் உத்தரவின்படி வாட்டர் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பப்படாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கட்டுப்பாடு காரணமாக பெட்ரோல் பங்குகளில் வாட்டர் பாட்டிலில் பெட்ரோல் வழங்கப்படவில்லை.

இதற்கு வாகன ஓட்டிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். நடுவழியில் மோட்டார் சைக்கிள் பெட்ரோல் இல்லாமல் நிற்கிறது. வாட்டர் பாட்டிலில் பெட்ரோல் தரவில்லை என்றால் எப்படி மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பி, அதனை இயக்குவது என்று பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.


Next Story