பா.ஜ.க. கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து போராட்டம்


பா.ஜ.க. கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து போராட்டம்
x

பா.ஜ.க. கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 19-வது வார்டு பகுதி கவுன்சிலராக இருப்பவர் மகேஸ்வரி. சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் பின்னர் பா.ஜ.க.வில் இணைந்து செயல்பட்டு வருகிறார். இவரது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஒரு ஆண்டில் 2 வளர்ச்சி பணிகள் மட்டுமே நடந்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பல முறை மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தியும் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை மாநகராட்சி அலுவலகத்தில் சாதாரண கூட்டம் நடைபெற்றது. அப்போது கவுன்சிலர் மகேஸ்வரி தனது வார்டு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் 150 பேருடன் மாநகராட்சி அலுவலத்தை முற்றுகையிட்டார். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். அவருடன் 33-வது வார்டு பா.ஜ.க. கவுன்சிலர் குமரிபாஸ்கரும் போராட்டத்தில் கலந்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கமிஷனர் சங்கரன், போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். விரைவில் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதாக உறுதி அளித்தார். அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story