பா.ஜ.க. நிர்வாகிகள் வீடுகளை சேதப்படுத்திய வழக்கில் இதுவரை ஒருவரை கூட கைது செய்யாதது ஏன்? அண்ணாமலை கண்டனம்


பா.ஜ.க. நிர்வாகிகள் வீடுகளை சேதப்படுத்திய வழக்கில் இதுவரை ஒருவரை கூட கைது செய்யாதது ஏன்? அண்ணாமலை கண்டனம்
x

பா.ஜ.க. நிர்வாகிகள் வீடுகளை சேதப்படுத்திய வழக்கில் இதுவரையில் ஒருவரை கூட கைது செய்யாததற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார்.

சென்னை

சென்னையை அடுத்த தாம்பரம், கேம்ப் ரோடு பகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

பின்னர் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:-

கோவை மாவட்டம் உள்பட 6 மாவட்டங்களில் 19 இடங்களில் பா.ஜ.க. நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது. 6 நாட்களாக இந்த சம்பவம் தொடர்ந்து நடைபெற்றுகொண்டிருக்கிறது. இதுபோன்ற சம்பவங்களை பா.ஜ.க.வால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இதற்கு எதிராக பா.ஜ.க. களம் இறங்கினால் என்னவாகும்? என்பதை தமிழக அரசு புரிந்து கொள்ளவேண்டும். இதைபோன்ற தீய சக்திகள் அனைவரையும் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பா.ஜ.க. தொண்டர்களுக்கு வெறும் அரைமணி நேரம் போதும். ஆனால் பா.ஜ.க. அமைதியை விரும்பும் கட்சி.

தி.மு.க. எம்.பி. ஆ.ராசா தெரிவித்த கருத்துக்கு எதிராக பேசிய பா.ஜ.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் பா.ஜ.க. நிர்வாகிகளின் வீடுகள், உடைமைகள் சேதப்படுத்தப்பட்ட வழக்கில் இதுவரையில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லைேய ஏன்? இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

தாம்பரம் தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா தனியார் தொழிற்சாலைக்கு சென்று மிரட்டியது குறித்து பத்திரிகையில் செய்தி வெளியானதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்தார்கள். ஆனால் கைது நடவடிக்கை இருக்காது. அவரை காப்பாற்றத்தான் பார்ப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story