போட்டி தேர்வுகளில் இளைஞர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற வேண்டும்பயிற்சி வகுப்பில் கலெக்டர் சாந்தி பேச்சு


போட்டி தேர்வுகளில் இளைஞர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற வேண்டும்பயிற்சி வகுப்பில் கலெக்டர் சாந்தி பேச்சு
x
தினத்தந்தி 31 May 2023 5:00 AM GMT (Updated: 31 May 2023 5:01 AM GMT)
தர்மபுரி

தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் போட்டி தேர்வுகளில் அதிக அளவில் பங்கேற்று தேர்ச்சி பெற வேண்டும் என்று கலெக்டர் சாந்தி பேசினார்.

இலவச பயிற்சி வகுப்பு

தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் எஸ்.எஸ்.சி., ரெயில்வே, வங்கி பணி ஆகிய போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடங்கியது. இந்த பயிற்சி வகுப்பை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலமாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் 50 நாட்கள் நடைபெற உள்ளன. 300 மணி நேரம் வழிகாட்டல் வகுப்புகள் நடைபெறும். இதில் 120-க்கும் மேற்பட்ட மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு இலவச பாட குறிப்புகள் வழங்கப்படும்.

அதிக அளவில் தேர்ச்சி

இந்த பயிற்சி வகுப்பில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலை வாய்ப்பு தேடும் இளைஞர்கள் தினமும் பங்கேற்க வேண்டும். இங்கு நடத்தப்படும் மாதிரி தேர்வுகளில் தொடர்ச்சியாக கலந்து கொண்டு எஸ்.எஸ்.சி. ரெயில்வே, வங்கி பணி ஆகியவற்றிற்கான போட்டி தேர்வுகளை எழுத விண்ணப்பித்து பங்கேற்று அதிக அளவில் தேர்ச்சி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செந்தில்குமார், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் முரளிதரன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக பயிற்சி அலுவலர் அமிர்த விக்ரமன் உள்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story