முத்துராமலிங்கத்தேவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு அரசு சார்பில் சிலைகள்


முத்துராமலிங்கத்தேவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு அரசு சார்பில் சிலைகள்
x

திருப்பூரில் முத்துராமலிங்கத்தேவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருக்கு அரசு சார்பில் சிலைகள் நிறுவ வேண்டும் என அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூர்

திருப்பூரில் முத்துராமலிங்கத்தேவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருக்கு அரசு சார்பில் சிலைகள் நிறுவ வேண்டும் என அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநாடு

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் 8-வது மாவட்ட மாநாடு திருப்பூர் ஊத்துக்குளி ரோடு மண்ணரையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. மாநில துணைத்தலைவரும், மாவட்ட பொதுச்செயலாளருமான எஸ்.கர்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜி.ரமேஷ், மாநில குழு உறுப்பினர் மகாலிங்கம், மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் கே.மகேஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில மாணவரணி செயலாளர் பாஸ்கரபாண்டியன், முன்னாள் மாநில செயலாளர்கள் ஜெயராமன், ராஜசேகர் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் ஆர்.கிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள்.

புதிய நிர்வாகிகள்

மாநாட்டில் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய துணைத் தலைவரும், தமிழ் மாநில பொதுச்செயலாளருமான பி.வி.கதிரவன் சிறப்புரையாற்றினார். ஏற்கனவே மாவட்ட பொதுச்செயலாளர் என்ற பதவியை மாவட்ட செயலாளர் என்று திருத்தம் செய்யப்படுவதாக மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. இதன்படி திருப்பூர் மாவட்ட செயலாளராக எஸ்.கர்ணன் உள்பட ஏராளமான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

சிலைகள்

திருப்பூரில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருக்கு அரசு சார்பில் சிலைகள் நிறுவ வேண்டும். இந்தியா முழுவதும் காந்தி ஜெயந்திக்கு விடுமுறை அளிப்பது போன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜெயந்திக்கும் மத்திய அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும். இதேபோல் இந்திய ரூபாய் நோட்டில் நேதாஜியின் உருவ படத்தை அச்சிட்டு வெளியிட வேண்டும்.

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், உடுமலை, அமராவதி உள்பட மாவட்டம் முழுவதும் பீகார், உத்தரபிரதேசம், ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலத்தை சேர்ந்த சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அண்மை காலமாக வடமாநிலத்தவர்களுக்கும், தமிழ் தொழிலாளர்களுக்கும் சிறிய மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்கும் வகையிலும், இருதரப்பினருக்கிடையிலான ஒற்றுமையை உறுதிப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறையும், அனைத்து நகரங்கள், ஒன்றியங்கள், வார்டுகளில் அனைத்து கட்சிகள் கொண்ட உறுப்பினர்களையும், அனைத்து பொதுநல அமைப்புகளையும் ஏற்படுத்த வேண்டும்.

மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story