தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்


தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

கீழ்வேளூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் பேரூராட்சி பகுதியில் கீழ்வேளூர் வட்டார சுகாதார துறையினர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடைகளில் விற்கப்படுகிறதா? என்று நேற்று சோதனை செய்தனர்.கீழவீதி, வடக்கு வீதி, தெற்கு வீதி பகுதியில் உள்ள கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.இதில் 5 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இந்த கடைகளில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.200 வீதம் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.இந்த சோதனை பணியில் கீழ்வேளூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கோகுல்நாதன், சுகாதார மேற்பார்வையாளர்கள் தியாகராஜன், பாலன் மற்றும் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டனர்.


Next Story