கோத்தகிரியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்-பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆய்வு


கோத்தகிரியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்-பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 25 Sep 2022 6:45 PM GMT (Updated: 25 Sep 2022 6:46 PM GMT)

கோத்தகிரி நேற்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி நேற்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.

தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசி முக்கிய பங்கு வகித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின்படி நேற்று கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட 10 மையங்களில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி இடும் பணி நடைபெற்றது. இதில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இடும் பணி நடைபெற்றது. கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று காலை துவங்கிய தடுப்பூசி முகாமை நீலகிரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராகிம் ஷா தொடங்கி வைத்தார்.

வீடு, வீடாக சென்று...

தொடர்ந்து பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை அவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கோத்தகிரி செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர். மேலும் பேரூராட்சி வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கி மூலமாக, பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில், இம்மாதம் இறுதி வரை பூஸ்டர் தடுப்பூசிகளை இலவசமாக போட்டுக் கொண்டு பயனடையலாம் எனவும், தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்தும் தொடர்ந்து அறிவிப்பு செய்யப்பட்டது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள், முதியவர்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டு பூஸ்டர் தடுப்பூசி இட்டுச் சென்றனர்.

இது மட்டுமின்றி சுகாதாரத் துறை செவிலியர்கள் வீடு தோறும் சென்று பூஸ்டர் தடுப்பூசி தேவைப்பட்டவர்களுக்கு தடுப்பூசி இடும் பணியை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story