பயிர் மேலாண்மை தொழில் நுட்ப பயிற்சி


பயிர் மேலாண்மை தொழில் நுட்ப பயிற்சி
x

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் பயிர் மேலாண்மை தொழில் நுட்ப பயிற்சி நடந்தது.

திருவாரூர்

நீடாமங்கலம்:

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயிர் மேலாண்மை இயக்குனரகம் மற்றும் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் இந்திய- ஜெர்மன் கூட்டத் திட்டமான காலநிலைக்கேற்ற புதுமையான காப்பீடு என்ற திட்டத்தின் கீழ் காவிரி டெல்டா பகுதிக்கேற்ற பயிர் மேலாண்மை தொழில்நுட் பயிற்சி வடுவூரில் நடந்தது. டெல்டா வடுவூர் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவன இயக்குனர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். அறிவியல் நிலைய பேராசிரியர் பெரியார் ராமசாமி கலந்து கொண்டு காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை எவ்வாறு உயர்த்திக் கொள்ள முடியும் என்பதை விளக்கினார். உதவிப்பேராசிரியர் ஜெகதீசன் தோட்டக்கலை பயிர்கள் எவ்வாறு பருவநிலை மாறுபாடுக்கேற்றவாறு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதனை விளக்கினார். கோவை நீர் நுட்பவியல் மைய இணை ஆராய்ச்சியாளர் சீனிவாசன் மற்றும் பயிர் மேலாண்மை இயக்குனராக முதுநிலை ஆராய்ச்சியாளர் திவ்ய பிரசாந்த் டெல்டா பகுதியில் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற வேளாண் தொழில்நுட்பங்களை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என பேசினார். இளநிலை ஆராய்ச்சியாளர் சுரேஷ்குமார் காலநிலைக்குஏற்ற மாற்று பயிர் திட்டங்களை விளக்கினார். தொழில்நுட்ப உதவியாளர் மணிமாறன் பயிர் காப்பீடு திட்டங்களை பற்றி எடுத்துரைத்தார். இதற்கான ஏற்பாடுகளை தொழில்நுட்ப உதவியாளர் குகன் செய்திருந்தார்.


Next Story