பனையனார் வாய்க்கால் தூர்வாரும் பணி


பனையனார் வாய்க்கால் தூர்வாரும் பணி
x
தினத்தந்தி 31 May 2023 6:45 PM GMT (Updated: 31 May 2023 6:45 PM GMT)

கூத்தாநல்லூர் அருகே பனையனார் வாய்க்கால் தூர்வாரும் பணியை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்தார்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே பனையனார் வாய்க்கால் தூர்வாரும் பணியை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்தார்.

தூர்வாரும் பணி

கூத்தாநல்லூர் அருகே உள்ள, பனங்காட்டாங்குடி பனையனார் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெற்றது. தூர்வாரும் பணிகளை நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் சாருஸ்ரீ உடன் இருந்தாா். தொடர்ந்து, நீர்வளத்துறை அரசு கூடுதல் தலமை செயலாளர் சந்தீப்சக்சேனா நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி டெல்டா மாவட்டங்களில் 4700 கி.மீ.பாசன வாய்க்கால்களின் தூர்வாரும் பணி கடந்த மாதம் தொடங்கியது.. இதுவரை, 3800 கி.மீ.பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளது. மீதி உள்ள 900கி.மீ. பாசன வாய்க்கால்கள் இன்னும் ஓரிரு வாரங்களில் முழுமையாக தூர்வாரப்படும்.

கண்காணிப்பு

தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் கண்காணித்து பணிகள் விரைவாக நடைபெற நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். டெல்டா மாவட்டங்களில் உள்ள ஏ மற்றும் பி வாய்க்கால்கள் நீர்வளத்துறையின் மூலம் தூர்வாரப்படுகிறது. சி மற்றும் டி வாய்க்கால்கள் ஊரக வளர்ச்சித் துறையினர் மூலம் தூர்வாரப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது தலமை பொறியாளர் (திருச்சி) ராமமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மன்னார்குடி உதவி கலெக்டர் கீர்த்தனாமணி, கூத்தாநல்லூர் தாசில்தார் குருமூர்த்தி, வெண்ணாறு கோட்ட செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் சிதம்பரம் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.


Next Story