விவசாயிகள் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன் பெறுங்கள் - வேளாண் அதிகாரி வேண்டுகோள்


விவசாயிகள் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன் பெறுங்கள் - வேளாண் அதிகாரி வேண்டுகோள்
x

விவசாயிகள் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன் பெறுங்கள் என்று வேளாண் அதிகாரி அசோக் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு

உழவன் செயலி

செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அசோக் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் ''உழவன் செயலி'' என்ற செயலி உருவாக்கப்பட்டு விவசாயிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த செயலியின் முகப்பு அலைபேசியில் கீழ்க்கண்டவாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தேவையான 22 வகையான சேவைகள் இந்த செயலி மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய அரசின் வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண் பொறியியல் துறை, சான்றளிப்புத்துறை, நீர்வடி பகுதி திட்டம் மற்றும் வேளாண்மை பல்கலைக்கழகம் போன்ற பல்வேறு துறைகளின் மூலம் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்பதையும், இந்த துறைகளின் மூலம் தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய இடு்பொருட்களின் தேவையை மானிய விலையில் பெற்று பயன் பெறவும், இந்த செயலி வாயிலாகவே தேவையான விவரங்களையும், ஆவணங்களையும் உள்ளீடு செய்து விண்ணப்பிக்கலாம்.

பயிர் காப்பீடு

மேலும் இந்த செயலின் மூலம் பயிர் காப்பீடு, உரம் மானியம், விதைகளின் இருப்பு, உதவி வேளாண்மை அலுவலர் வருகை விவரம், பூச்சி நோய் தாக்குதல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு முறைகளின் பரிந்துரைகள், வேளாண் எந்திரங்களின் இருப்பு மற்றும் வாடகை போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக அரசின் முன்னோடி திட்டமான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தரிசு நிலங்களை சாகுபடி நிலங்களாக மாற்ற குழுவாக பதிவு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த செயலியானது ஆண்ட்ராய்டு மற்றும் ஐ-போன் ஆகிய இரண்டு விதமான கைபேசிகளிலும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எனவே செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் அனைவரும் இந்த செயலியை தங்களது அலைபேசியில் பதிவிறக்கம் செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களையும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story