பையூர் அருகே போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்த பெண்-போலீசார் விசாரணை


பையூர் அருகே போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்த பெண்-போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 25 Sep 2022 6:45 PM GMT (Updated: 25 Sep 2022 6:46 PM GMT)
கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்:

பையூர் அருகே போலி சான்றிதழ் கொடுத்து அரசு பள்ளியில் ஆய்வக உதவியாளராக சேர்ந்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆய்வக உதவியாளர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் அருகே உள்ள கீழ் பையூரை சேர்ந்தவர் சங்கர். இவர் இறந்து விட்டார். இவருடைய மனைவி ரேகா. இவர் கரகூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்தநிலையில் கிருஷ்ணகிரி கல்வி மாவட்ட அலுவலர் ஆனந்தன், இவரது சான்றிதழ்களை ஆய்வு செய்தார். அதில் ரேகா போலி ஆவணங்கள் கொடுத்து பணிக்கு சேர்ந்தது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தன் காவேரிப்பட்டணம் போலீசில் புகார் செய்தார்.

வழக்குப்பதிவு

அதில் கடந்த 20.4.2017 அன்று கரகூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக ரேகா சேர்ந்துள்ளார். அவரது ஆதரவற்ற விதவை சான்றிதழை சரிபார்த்த போது அது போலி சான்றிதழ் என தெரிய வந்தது. அரசு வேலையில் சேர்வதற்காக போலி சான்றிதழை அவர் கொடுத்துள்ளார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அந்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி, ரேகா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story