ஆஸ்திரேலியா கோப்பையை வெல்வதற்கு என்ன காரணம் தெரியுமா? மார்க்கண்டேய கட்ஜு விளக்கத்தை பாருங்க..!


ஆஸ்திரேலியா கோப்பையை  வெல்வதற்கு என்ன காரணம் தெரியுமா? மார்க்கண்டேய கட்ஜு  விளக்கத்தை பாருங்க..!
x
தினத்தந்தி 20 Nov 2023 4:01 PM GMT (Updated: 20 Nov 2023 5:03 PM GMT)

மார்க்கண்டேய கட்ஜுவின் கருத்தை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து பதிவிட்டு வருகின்றனர்.

புதுடெல்லி,

ஆமதாபாத்தில் நேற்று நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இது அணி வீரர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

அந்த வகையில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியிருப்பதாவது:- பாண்டவர்களின் அஸ்திரங்களை வைக்கும் இடமாக ஆஸ்திரேலியா இருந்தது. அது அஸ்திராலயா என்று அழைக்கப்பட்டது. அவர்கள் உலக கோப்பையை ஏன் வாங்குகிறார்கள் என்பதற்கு உண்மையான காரணம் இதுதான்" என்று பதிவிட்டுள்ளார். மார்க்கண்டேய கட்ஜுவின் இந்த கருத்தை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்தும் பதிவிட்டு வருகின்றனர்.


Next Story