சப்-இன்ஸ்பெக்டர் பணி தேர்வுக்கு இலவச பயிற்சி


சப்-இன்ஸ்பெக்டர் பணி தேர்வுக்கு இலவச பயிற்சி
x
தினத்தந்தி 31 May 2023 6:45 PM GMT (Updated: 31 May 2023 6:46 PM GMT)

சப்-இன்ஸ்பெக்டர் பணி தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைதேடும் இளைஞர்கள் படித்து பயன்பெரும் வண்ணம் தன்னார்வ பயிலும் வட்டம் இயங்கி வருகிறது. இந்த தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு வகையான போட்டித்தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு 743 பணிக்காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 1.7.23 தேதியில் குறைந்தபட்சம் 20 வயது, அதிகபட்சம் பொதுப்போட்டியினருக்கு 30 வயது வரையிலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 32 வயது வரையிலும், பட்டியல் மற்றும் பழங்குடியினர், திருநங்கைகளுக்கு 35 வயது வரையிலும், ஆதரவற்ற விதவைகளுக்கு 37 வயது வரையிலும், முன்னாள் படைவீரர்களுக்கு 47 வயது வரையிலும் இருத்தல் வேண்டும். www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக 1.6.23 முதல் 30.6.23 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுகட்டணம் ரூ.500.

இப்போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வாரந்தோறும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரடியாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.


Next Story