பல்வேறு போட்டிகளில் ஊர்க்காவல் படையினர் வெற்றி


பல்வேறு போட்டிகளில் ஊர்க்காவல் படையினர் வெற்றி
x

பல்வேறு போட்டிகளில் ஊர்க்காவல் படையினர் வெற்றி பெற்றனர்.

விருதுநகர்

ராஜபாளையம்,

தமிழ்நாடு ஊர்க்காவல் படையினருக்கான 28-வது மாநில அளவிலான தொழில் முறை மற்றும் விளையாட்டு போட்டிகள் திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இதில் அக்னி 2023 போட்டிகளில் மதுரை சரகம் சார்பில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 25 ஊர்காவல் படையினர் கலந்து கொண்டு, இறகுப்பந்து போட்டியில் துணை வட்டாரத் தளபதி அருள்செல்வி மாநில அளவில் 2-வது இடமும், முதலுதவி தொழில் முறை போட்டியில் 2-வது இடமும் பெற்றார். அதேபோல கயிறு இழுக்கும் போட்டி பெண்கள் பிரிவில் முதலிடமும், கயிறு இழுக்கும் போட்டி ஆண்கள் பிரிவில் தொடர்ச்சியாக 26 ஆண்டுகளாக வெற்றி பெற்று வந்த விழுப்புரம் சரகத்தை வீழ்த்தி முதலிடமும், ஒட்டுமொத்த விளையாட்டு போட்டிகளில் 2-வது இடமும், ஒட்டுமொத்தமாக தொழில் முறை மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்று மாநில அளவில் முதலிடத்தையும் பெற்றனர். மதுரை சரகம் சார்பில் கலந்து கொண்ட விருதுநகர் மாவட்ட ஊர்க்காவல் படையினரை மதுரை சரக துணை தளபதி ராம்குமார் ராஜா, விருதுநகர் மாவட்ட வட்டார தளபதி அழகர்ராஜா, வட்டார துணைத் தளபதி அருள்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் தேவதாஸ் மற்றும் எழுத்தர் சிவராமன் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் நேரில் அழைத்து பாராட்டினார்.


Next Story