கடம்பூர் மலைக்கிராமத்தில் கான்கிரீட் ரோடு, மின்விளக்கு வசதிகலெக்டரிடம் பண்ணாரி எம்.எல்.ஏ. கோரிக்கை


கடம்பூர் மலைக்கிராமத்தில் கான்கிரீட் ரோடு, மின்விளக்கு வசதிகலெக்டரிடம் பண்ணாரி எம்.எல்.ஏ. கோரிக்கை
x

கடம்பூர் மலைக்கிராமத்தில் கான்கிரீட் ரோடு, மின்விளக்கு வசதி கேட்டு கலெக்டரிடம் பண்ணாரி எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தாா்

ஈரோடு

பவானிசாகர் தொகுதி பண்ணாரி எம்.எல்.ஏ. நேற்று ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் நேரில் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:-

கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு எஸ்.டி. சான்று, பொதுமக்களின் ஓய்வூதியம், வீட்டுமனை பட்டா, பழங்குடியினருக்கு வீடு ஒதுக்கீடு, மலைப்பகுதியில் கான்கிரீட் ரோடு, மின்விளக்கு உள்பட பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் இதுவரை 2 ஆயிரம் கொடுத்திருக்கிறோம். அந்த மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

மனுவைப் பெற்றுக்கொண்ட கலெக்டர் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அப்போது எம்.எல்.ஏ.வுடன் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் வாத்தியார் துரைசாமி, கடம்பூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் நாச்சிமுத்து ஆகியோர் இருந்தார்கள்.


Next Story