குரூப்-4 பதவிகளில் வரும் காலி பணியிடங்கள் அதிகரிப்பு - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு


குரூப்-4 பதவிகளில் வரும் காலி பணியிடங்கள் அதிகரிப்பு - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
x
தினத்தந்தி 22 March 2023 1:14 AM GMT (Updated: 22 March 2023 3:38 AM GMT)

அந்த வகையில், 2 ஆயிரத்து 816 இடங்கள் அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 10 ஆயிரத்து 117 இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை,

கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) உள்பட குரூப்-4 பதவிகளில் வரும் காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 24-ந்தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழ்நாடு முழுவதும் 18 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினர்.

இவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்படுவதாக இருந்த நிலையில், தற்போது வரை தேர்வு முடிவு வெளியாகவில்லை. இதையடுத்து சமூக வலைதளங்களில் தேர்வை எழுதிய தேர்வர்கள் தேர்வு முடிவை வெளியிடக்கோரி கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி இந்த மாத இறுதிக்குள் தேர்வு முடிவு வெளியாகும் என்று தேர்வை நடத்திய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.

ஏற்கனவே தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானபோது, 7 ஆயிரத்து 301 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த காலி பணியிடங்களை கூடுதலாக அதிகரித்து, டி.என்.பி.எஸ்.சி. நேற்று அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில், 2 ஆயிரத்து 816 இடங்கள் அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 10 ஆயிரத்து 117 இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.


Next Story