இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடியேற்று விழா


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடியேற்று விழா
x
தினத்தந்தி 31 May 2023 7:00 PM GMT (Updated: 31 May 2023 7:00 PM GMT)

புளியங்குடியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடியேற்று விழா நடந்தது.

தென்காசி

புளியங்குடி:

புளியங்குடி ஜின்னா நகர் 5-வது தெருவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடியேற்று விழா நடைபெற்றது. நகர தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் கோதர் மைதீன், மாவட்ட துணைத் தலைவர் கலில் ரகுமான், துணை செயலாளர் அப்துல் வகாப், வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் ஜாகிர் அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ஷேக் காதர் மைதீன் வரவேற்றார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளரும். முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முகமது அபுபக்கர் கலந்து கொண்டு, கொடியேற்றினார்.

விழாவில் முஸ்லிம் யூத் லீக் நெல்லை மாவட்ட செயலாளர் நயினார் முகம்மது, புளியங்குடி நகர துணை தலைவர்கள் காஜா மைதீன், செய்யது அப்துல் ரகுமான், செய்யது அலி பாதுஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்

தொடர்ந்து கடையநல்லூர் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 10, 12-வது வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா கடையநல்லூரில் நடைபெற்றது. நகர தலைவர் செய்யது மசூது தலைமை தாங்கினார். அயூப்கான் வரவேற்றார். மாநில அமைப்பு செயலாளர் நெல்லை மஜித், முன்னாள் எம்.எல்.ஏ. கோதர்மைதீன், முன்னாள் எம்.எல்.ஏ.முகமது அபுபக்கர், நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

பின்னர் முகமது அபுபக்கர் நிருபர்களிடம் கூறுகையில், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவர், துணை தலைவர் அழைக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது. கர்நாடகத்தில் மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைந்து காங்கிரஸ் வெற்றி பெற்றதோ அதுபோல் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் மதசார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதற்கான பணிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடங்கியுள்ளது' என்றார்.



Next Story