தனிநபர் சிறு தொழில், கல்வி கடன் வழங்கப்படும்


தனிநபர் சிறு தொழில், கல்வி கடன் வழங்கப்படும்
x

தனிநபர் சிறுதொழில், கல்வி கடன் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விருதுநகர்


தனிநபர் சிறுதொழில், கல்வி கடன் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடன் உதவி

திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்புறங்களில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்குள்ளும், கிராமப்புறங்களில் ரூ. 98 ஆயிரத்துக்குள்ளும், திட்டம் 2-ன்கீழ் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

திட்டம்-1 ன் கீழ் தனி நபர் கடன் ஆண்டுக்கு 6 சதவீத வட்டி வீதத்திலும், அதிகபட்ச கடனாக ரூ.20 லட்சமும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீத வட்டியிலும், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ. 30 லட்சம் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது.

கல்வி நிலையங்கள்

சுய உதவிக்குழு கடன் பெற தனிநபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் ஆண்டுக்கு 7 சதவீத வட்டி விகிதத்திலும் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கடன் வழங்கப்படுகிறது. மேலும் சிறுபான்மை மாணவ-மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழில்கல்வி, தொழில்நுட்ப கல்வி பயில அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ. 2 லட்சமும், 3சதவீத வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் 8 சதவீத வட்டி விகிதத்தில் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கு 5 சதவீத வட்டி விகிதத்திலும் ரூ.30 லட்சம் வரையும் கல்வி கடன் உதவி வழங்கப்படுகிறது.

விண்ணப்பம்

இஸ்லாமிய, சிக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம்.

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களுக்கான தனிநபர் கடன், சுய உதவி குழுவிற்கான, சிறு தொழில் கடன், கல்விக்கடன்களை பெற விரும்புபவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.


Related Tags :
Next Story