சீர்காட்சி பத்திரகாளியம்மன்கோவில் கும்பாபிஷேக விழா: புதன்கிழமைநடக்கிறது


சீர்காட்சி பத்திரகாளியம்மன்கோவில் கும்பாபிஷேக விழா: புதன்கிழமைநடக்கிறது
x
தினத்தந்தி 31 Jan 2023 6:45 PM GMT (Updated: 31 Jan 2023 6:47 PM GMT)

சீர்காட்சி பத்திரகாளியம்மன்கோவில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடக்கிறது

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி அருகே உள்ள சீர்காட்சி பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 30-ந் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடந்து வந்தது. நேற்று காலை 6.30 மணிக்கு 2-ம்கால யாகசாலபூஜை, பாவனபூஜை, எந்திர பூஜை, மூல மந்திர ஜெபம், சிவசூரியபூஜை, தோரண பூஜை, வேதிகா பூஜை ஆகியன நடந்தது. நண்பகல் 12 மணிக்கு பக்தர்களால் அம்பாளுக்கு மஞ்சள், பால் அபிஷேகம் நடத்தப்பட்டது. மாலை 5 மணி முதல் 3-ஆம் கால யாகசாலை பூஜை, தம்பதி பூஜை, பிரசாதம் வழங்குதல் ஆகியன நடந்தது. இரவு 7.45 மணி முதல் 9 மணி வரை எந்திர ஸ்தாபனம், அம்பாளுக்கு மருந்து சாத்துதல், பிரம்மசக்தி ரக்ஷாபந்தன் நடந்தது. இன்று(புதன்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு 4-ம்கால யாகசாலை பூஜை, சிவசூரிய பூஜை, எந்திரதானம் ஆகியன நடந்தது. காலை 6 மணிக்கு யாகசாலை பூஜையில் இருந்து, கும்பம் எழுந்தருளி, விமான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம், பத்திரகாளி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், மகா அபிஷேகமும், கும்ப பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து மகா அபிஷேகம், பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஊர் மக்களும், விழா கமிட்டியினரும் சிறப்பு செய்துள்ளனர்.


Next Story