மகாமாரியம்மன் கோவில் பால்குட திருவிழா


மகாமாரியம்மன் கோவில் பால்குட திருவிழா
x
தினத்தந்தி 31 May 2023 6:45 PM GMT (Updated: 31 May 2023 6:45 PM GMT)

குத்தாலம் அருகே திருமங்கலத்தில் மகாமாரியம்மன் கோவில் பால்குட திருவிழா நடந்தது

மயிலாடுதுறை

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருமங்கலம் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பால்குட திருவிழா கடந்த 23-ந் தேதி பந்தல்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 9 நாட்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று பால்குட திருவிழா நடந்தது. முன்னதாக கங்கணம் கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் விக்ரமன் ஆற்றங்கரையிலிருந்து வாண வேடிக்கைகள், மேல வாத்தியங்கள் முழங்க சக்தி கரகம், பால்குடம்,அலங்கார காவடிகள் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை திருமங்கலம் கிராமமக்கள், ஊர் முக்கியஸ்தர்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.


Next Story