மின்மோட்டார்களை தயார் செய்யும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு


மின்மோட்டார்களை தயார் செய்யும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
x
தினத்தந்தி 25 Sep 2022 6:45 PM GMT (Updated: 25 Sep 2022 6:47 PM GMT)

தூத்துக்குடியில் மின்மோட்டார்களை தயார் செய்யும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் காலம் நெருங்கி உள்ளது. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்காமல் தடுப்பதற்கான வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அதே நேரத்தில் மழைநீர் தேங்கினால் அதனை மின்மோட்டார் மூலம் அகற்றுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் கடந்த காலங்களில் மாநகராட்சி பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்றுவதற்காக வாங்கப்பட்டு, மாநகராட்சியில் வைக்கப்பட்டு உள்ள மின்மோட்டார்களை மீண்டும் தயார் நிலைக்கு கொண்டு வரும் பணிகள் நடந்தன.இந்த பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, ஆணையாளர் சாருஸ்ரீ, செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதே போன்று திடக்கழிவு மேலாண்மை பணிக்காக 15-வது மத்திய நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பில் புதிதாக டிப்பர் லாரி வாங்கப்பட்டு உள்ளது. இந்த லாரியை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story