மேகதாது அணை விவகாரம்:கர்நாடக அரசை மத்திய அரசு கண்டிக்க வேண்டும்காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் அறிக்கை


மேகதாது அணை விவகாரம்:கர்நாடக அரசை மத்திய அரசு கண்டிக்க வேண்டும்காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் அறிக்கை
x
தினத்தந்தி 31 May 2023 6:45 PM GMT (Updated: 1 Jun 2023 6:51 AM GMT)

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்று காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளனா்.

கடலூர்


காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக துணை முதல்-அமைச்சர் டி.கே. சிவக்குமார் மேகதாது அணையை விரைவில் கட்டுவோம் என்று கூறி இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதனால் தமிழகத்தில் உள்ள விவசாயிகள் மத்தியில் கொதிப்பு நிலையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மேகதாதுவில் அணை கட்டுவதை எந்த காலத்திலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறி இருக்கிறார். இது சற்று விவசாயிகளுக்கு ஆறுதல் அளித்தாலும் கூட, உடனடியாக மத்திய அரசு இதில் தலையிட்டு தமிழக விவசாயிகளுக்கு அநீதி இழைக்கும் மேகதாது அணை விஷயத்தில் உடனடியாக கர்நாடக அரசின் செயலை கண்டிக்க வேண்டும். இல்லையென்றால் தமிழகமெங்கும் தமிழக விவசாயிகள் மிக பெரிய போராட்டத்தை கையில் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story