ரூ.7 லட்சத்தில் 17 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால்

ரூ.7 லட்சத்தில் 17 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால்
x

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 17 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.7 லட்சம் மதிப்புள்ள நவீன செயற்கை கால்களை கலெக்டர் வழங்கினார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 17 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.7 லட்சம் மதிப்புள்ள நவீன செயற்கை கால்களை கலெக்டர் வழங்கினார்.

குறைதீர்வு கூட்டம்

திருப்பத்துார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது. இதில், வேலை வாய்ப்பு, கல்விக்கடன், வீட்டு மனை பட்டா, குடும்ப அட்டை, முதியோர் ஓய்வூதியம், சாலை வசதி உள்ளிட்ட பொது நலன் குறித்து 287 மனுக்களை பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் பெற்றுக்கொண்டார்.

இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியானதாக இருப்பின் அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

நவீன செயற்கை கால்கள்

அதைத் தொடர்ந்து முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 17 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான நவீன செயற்கை கால்களை கலெக்டர் அமர்குஷ்வாஹா வழங்கினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வில்சன் ராஜசேகர், ஹரிஹரன், தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, கலால் உதவி ஆணையர் பானு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story