நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை 5 காசுகள் உயர்வு5 ரூபாயாக நிர்ணயம்


நாமக்கல் மண்டலத்தில்முட்டை விலை 5 காசுகள் உயர்வு5 ரூபாயாக நிர்ணயம்
x
தினத்தந்தி 31 May 2023 7:00 PM GMT (Updated: 31 May 2023 7:00 PM GMT)
நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 495 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 500 காசுகளாக உயர்ந்துள்ளது.

கறிக்கோழி கிலோ ரூ.127-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.96-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர். முட்டை விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story