புரட்டாசி மாதம், மகாளய அமாவாசையையொட்டி பரமத்திவேலூரில் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்


புரட்டாசி மாதம், மகாளய அமாவாசையையொட்டி  பரமத்திவேலூரில் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்
x

புரட்டாசி மாதம், மகாளய அமாவாசையையொட்டி பரமத்திவேலூரில் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்

நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூரில் புரட்டாசி மாதம் மற்றும் மகாளய அமாவாசையையொட்டி இறைச்சி கடைகள் வெறிச்சோடின.

நாட்டுக்கோழி சந்தை

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நாட்டுக்கோழி சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு பரமத்திவேலூர், மோகனூர், கரூர், பாளையம், நாமக்கல், ஜேடர்பாளையம், சோழசிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் நாட்டுக்கோழிகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

வீட்டில் வளர்க்கப்படும் சிறுவிடை, பெருவிடை, கீரி, கடகநாத், அசில், மயில் காகம், கருங்கண் கருங்காலி, கிரிராஜா உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டுக்கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. நாட்டுக்கோழிகளுக்கு இந்த பகுதியில் நல்ல வரவேற்பு உள்ளதால் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து நாட்டுக்கோழிகளை வாங்கி செல்கின்றனர்.

மகாளய அமாவாசை

தரமான நாட்டுக்கோழிகள் கடந்த மாதங்களில் கிலோ ஒன்று ரூ.450 முதல் ரூ.550 வரையிலும், பண்ணைகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள் கிலோ ரூ.300 முதல் ரூ.350 வரையிலும் விற்பனையானது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று புரட்டாசி மாதம் மற்றும் மகாளய அமாவாசையையொட்டி நாட்டுக்கோழி சந்தைக்கு மிகவும் குறைந்த அளவிலேயே விவசாயிகள், வியாபாரிகள் நாட்டுக்கோழிகளை கொண்டு வந்தனர்.

வாத்து

இதில் நாட்டுகோழிகள் கிலோ ரூ.300 முதல் ரூ.350 வரையிலும், பண்ணைகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள் ரூ.200 முதல் ரூ.300 வரையிலும் மட்டுமே விற்பனையானது. வாத்து ஒன்று ரூ.280 முதல் ரூ.300 வரையிலும் விற்பனையானது.

இதனால் நாட்டுக்கோழி சந்தை வெறிச்சோடி கலையிழந்து காணப்பட்டது. இதேபோல் மீன் சந்தை, ஆடு மற்றும் கோழி இறைச்சிக்கடைகளிலும் அசைவ பிரியர்கள் வராததால் அந்த கடைகளும் வெறிச்சோடி காணப்பட்டது.


Next Story