தமிழகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் திட்டமிட்ட சதி


தமிழகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் திட்டமிட்ட சதி
x

தமிழகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் திட்டமிட்ட சதி என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம் சாட்டி உள்ளார்.

மதுரை

தமிழகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் திட்டமிட்ட சதி என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம் சாட்டி உள்ளார்.

புகார் மனு

மதுரையில் நேற்று முன்தினம் இரவு, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் மதுரை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் மனுவை அளித்தனர். அந்த மனுவில், தமிழகத்தில் கடந்த சில தினங்களாக இந்து இயக்க பொறுப்பாளர்கள் வீடு மற்றும் தொழில் நிறுவனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது. மதுரையில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

திட்டமிட்ட சதி

இதனை தொடர்ந்து, காடேஸ்வரா சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறுகையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு. அதை என்.ஐ.ஏ. அமைப்பினர் சோதனை செய்கிறார்கள். ஆனால் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த சிலர் தமிழகத்தில் கிட்டத்தட்ட 22 இடங்களில் ஒரே மாதிரியான பெட்ரோல் குண்டு வீசி இருக்கிறார்கள். இது திட்டமிட்ட சதி. குறிப்பாக பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணியினர் வீடுகள், தொழிற்சாலைகளில் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவங்களில் தொடர்புடைய பயங்கரவாதிகளை காவல்துறை கைது செய்யாமல் இருப்பது அவர்களுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

தமிழகத்தில் அரசாங்கமும் உளவுத்துறையும் சரியில்லை. பயங்கரவாத அமைப்பை சேர்ந்த சிலர் தமிழகத்தில் பல கலவரங்களுக்கு திட்டமிட்டுள்ளார்கள். அவர்களை காவல்துறை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம் என்றார்.

அவருடன், இந்து முன்னணி மாநகர் மாவட்ட தலைவர் அழகர்சாமி, பா.ஜ.க. மாநகர் துணைத்தலைவர் ஜெயவேல் உள்ளிட்டோர் இருந்தனர்.


Related Tags :
Next Story