பென்னேரி ஆரணி ஆற்றங்கரையில் குப்பைகளை பயோ மைனிங் திட்டத்தில் அழிக்க முடிவு - பொன்னேரி நகராட்சி ஆணையர்


பென்னேரி ஆரணி ஆற்றங்கரையில் குப்பைகளை பயோ மைனிங் திட்டத்தில் அழிக்க முடிவு - பொன்னேரி நகராட்சி ஆணையர்
x

பென்னேரி ஆரணி ஆற்றங்கரையில் குப்பைகளை அழிக்க பயோ மைனிங் திட்டத்திற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக பொன்னேரி நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

திருவள்ளூர்

பொன்னேரி நகராட்சியில் 27 வார்டுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 1,721 வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நகராட்சி பகுதியில் நாள்தோறும் 11 ஆயிரம் கிலோ குப்பைக் கழிவுகள் வெளியேற்றப்படும் நிலையில் தூய்மை பணியாளர்கள் மூலம் பெறப்படும் குப்பைகளை ஆரணி ஆற்றங்கரையில் உள்ள கிடங்கு மற்றும் மீட்பு பூங்காவில் குப்பைகள் தரம் பிரிக்கப்படுகிறது. மக்கும் குப்பைகள் மூலம் உரம் தயாரிக்கப்படும் நிலையில் மங்காத குப்பைகள் ஆரணி ஆற்றங்கரையில் குவிக்கப்பட்டிருக்கிறது. இந்த குப்பகைளை தீ வைத்து எரிக்கப்படுவதால் காற்று மாசுபாடு மற்றும் பல்வேறு இன்னல்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி தமிழக அரசின் கவனத்திற்கு கோரிக்கை கொண்டுசெல்லப்பட்டது. இதையடுத்து தமிழக அரசின் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னேரி நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் 2.0-ன் கீழ் பயோ மைனிங் திட்டத்தின் மூலம் பஞ்செட்டி சாலை அருகே ஆரணி ஆற்றங்கரை அருகே உள்ள கழிவு சேமிப்பு கிடங்கில் உள்ள குப்பைகளை அழிக்க அனுமதி அளித்தார். இந்த பயோ மைனிங் திட்டத்திற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக பொன்னேரி நகராட்சி ஆணையர் கோபிநாத் தெரிவித்தார்.


Next Story